உள்நாடு

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் உணவு

நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்களுக்கும் பிரதான உணவு வழங்கும் வேலைத்திட்டம்இன்று (25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் 9134 அரசாங்க பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 100 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கி இந்த உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக 9 மாகாண சபைகளுக்கும் நேரடியாக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 16600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், உலக உணவுத் திட்டம், அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இதற்கு அனுசரணை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர் மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *