கல்பிட்டி அல் அக்ஸா வில் புதிய பழைய மாணவர் சங்க நிருவாகம் தெரிவு..!
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான பழையமாணவர் சங்க புதிய நிருவாகத் தெரிவு இன்று (25) இடம்பெற்றது.
78 வருட பழமை கொண்ட கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகக் தெரிவு பாடசாலையின் தம்பி நெய்னா மரிக்கார் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இன்று (24) காலை 10 மணிக்கு பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார் தலைமையில் ஆரம்பித்திருந்தது.
சுய பிராத்தனையுடன் ஆரம்பித்த நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய அதிபர் முன்னர் இருந்த பழைய மாணவர் சங்க நிருவாக உறுப்பினர்களின் சேவையினை நினைவு கூர்ந்ததுடன், பழைய மாணவர் சங்க நிருவாக உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
பின்னர் கல்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையிலிருந்து வருகை தந்திருந்த உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் பலீல் அவர்களினால் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பழைய மாணவர் சங்க நிருவாக உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான சுற்றறிக்கையினை தெளிவுபடுத்தியதுடன், பழைய மாணவர் சங்க நிருவாக உறுப்பினர்களின் சட்ட திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
பின்னர் நிருவாக உறுப்பினர்கள் தெரிவு ஆரம்பித்திருந்தது. அதில் செயலாளர் தெரிவிற்கு 3 பேர் போட்டியிட்டிருக்க வாக்கெடுப்பு முறை மூலம் முஹம்மது அர்சத் தெரிவானார். இந்நிகழ்வில் பெரும் அளவிலான கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவர் சங்க நிருவாக குழு உறுப்பினர்கள் விபரம்.
*தலைவர் – அதிபர் முஸ்தபா அன்சார்.
*உப தலைவர் – முஹம்மது ஹிஸ்மி
*செயலாளர் – முஹம்மது அர்சாத்
*இணைச் செயலாளர் – முஹம்மது ஹிஷான்
*பொருளாளர் – முஹம்மது ரூமி
*இணைப் பொருளாளர் – முஹம்மது கப்லி
*உறுப்பினர்கள்
1. பாத்திமா பர்வின்
2. முஹம்மது அர்சாத்
3. பாத்திமா ரிப்கா
4. முஹம்மது லத்தீப்
5. கலைச்செல்வி
6. முஹம்மது ரிஹான்
7. முஹம்மது முஸம்மில்
*கணக்காய்வாளர் – நிக்ஸன்
(அரபாத் பஹர்தீன்)