மோதரை ஹம்ஸா கல்லூரியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு..!
நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு, கொழும்பு – 15 மோதரை, ஹம்ஸா கல்லூரி மண்டபத்தில் (21) இடம்பெற்றது.
ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், ஐ.டி.எம்.என்.சி. (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் முழு அனுசரணையில் மிக விமர்சையாக இடம் பெற்ற இவ் இப்தார் நிகழ்வில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் “சட்ட முதுமானி” ஓ.எல். அமீர் அஜ்வாத், ஐ.டி.எம்.என்.சி. (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
ஐ.டி.எம்.என்.சி. (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் வியாபார மேம்பாட்டு முகாமையாளரும் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தருமான றிஸ்கான் முஹம்மத், வட கொழும்பு அபிவிருத்திச் சங்கத்தின் முக்கியஸ்தர்களான முஹம்மத் றிஸ்வி, முஹம்மத் ஹஸன், முஹம்மத் மீனாஸ், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில், பேரவை மற்றும் பேரவையின் மத்திய கொழும்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட “சட்ட முதுமாணி” யும், சிரேஷ்ட இராஜதந்திரியுமான ஓ.எல். அமீர் அஜ்வாத் மற்றும் “வசந்தம்” தொலைக்காட்சியின் பிரதான முகாமையாளராக சமீபத்தில் நியமணம் பெற்ற எம்.எஸ்.எம். இர்பான் ஆகியோரை, கலாநிதி ஜனகன் இச்சிறப்பு நிகழ்வில், பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )