தேசிய ரீதியில் பதக்கங்களை வெற்றி கொண்ட கல்பிட்டி அல் அக்ஸா மாணவிகள்
கைத்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறந்த முயற்சியாளர் கழகங்களுக்கிடையிலான கைத்தொழில், விவசாயம் தொடர்பான ஆக்க போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலையின் மாணவிகள் ஐவர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வெற்றி கொண்டனர்.
அத்துடன் இந்நிகழ்வின் சித்திர போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 4 மாணவிகள் பங்கேற்றதுடன், அந்த 4 சித்திரங்களும் இன்றைய நிகழ்வில் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் இப் போட்டி நிகழ்விற்கு முழு இலங்கையிலிருந்து பல பாடசாலைகள் பங்கேற்றிருக்க, வட மேல் மாகாணத்தில் இருந்து தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மொழி மூலமான பாடசாலை என்ற பெருமையையும் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இப் பரிசளிப்பு நிகழ்விற்கு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபரான எஸ். எப். சாஜினாஸ் மற்றும் ஆசிரியை நஸ்ரின் சகிதம் இப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களை வென்றெடுத்த மாணவிகள் பெயர் விபரம்
1.மனோகரன் பவதாரனி
2.தர்மலிங்கம் கவிலாஷினி
3.கன்திராஜா சுகன்யா
4.மொஹமட் சல்மான் பாத்திமா அஸ்ரா
5.மொஹமட் ரயீஸ் ஷேக்ஹா ஷீனத்
(அரபாத் பஹர்தீன்)