‘சமாதானத்துக்காக நீர்..!’ உலக நீர் தினம் இன்று..!
உலக நீர் தினம் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் திகதி உலகம் பூராகவும் கடந்த 30 வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டு உலக நீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிறகடனப்படுத்தப்பட்டுள்ள தொனிப் பொருள் “சமாதானத்துக்காக நீர்” என்பதாகும்.
நீரின் தேவையும் அத்தியாவசியமும் கருதி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் இந்நாள் உலகளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்களோடு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை ஏற்பாடு செய்துள்ள உலக நீர் தின விழா -2024 இன்று 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 8 மணிக்கு சபையின் நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் (cewas) கேட்போர் கூட்டத்தில் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் இராஜாங்க அமைச்சர் சசீந்ர ராஜபக்சவின் பங்கு பற்றலுடன் நடைபெறும்.
பேராதனை பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.டி.தர்மரத்ன விசேட சொற்பொழிவாற்றுவார்.
2024 உலக நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை நாடலாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே “சமாதானத்துக்காக நீர்” என்ற தலைப்பில் நடாத்திய சித்திர மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன் போது பரிசீல்களும் வழங்கப்படும்.
அத்தோடு சபையில் 25 வருடம் தொடர்ந்து சேவையாற்றிய ஊழியர்கள் கௌரவிப்பு,க.பொ.த.உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற சபை ஊழியர்களது பிள்ளைகளுக்கும் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
நீர் வளங்கள் வடிகால அமைப்புச் சபையின் சிறந்த காரியாலய தெரிவிப் போட்டியில் வெற்றி பெற்ற காரியங்களுக்கும் பரிசீலர் வழங்கப்படவுள்ளன.
அமைச்சின் செயலாளர் ஏ.ஸி.எம்.நபீல்,சபையின் தலைவர் நிசான்த்த ரணதுங்க,பொது முகாமையாளர் ருவன் விஜயகே உட்பட உயர் அதிகாரிகள் நிகழ்வில் உரையாற்றுவார்.
கலை,கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
(பேருவளை பி.எம். முக்தார்)