விழுது சஞ்சிகை வெளியீடு
விழுது சஞ்சிகையின் முதலாவது பிரதியான ”ஸஹ்று ரமழான்” சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு நேற்று (2024.03.20) திராசத்துல் இஸ்லாமிய்யா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவனும், அறிவிப்பாளரும், எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஹய் டீவி தமிழ் முகநூல் தொலைக்காட்சியின் பணிப்பாளருமான அகமட் கபீர் ஹஷான் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட் ஹனிபா கலந்து கொண்டிருந்தார்.
மேலும், இந்நிகழ்வுக்கு சிறப்பு அதீதியாக மாவட்ட உளவளதுணை ஆலோசகர் மனூஸ் அபுபக்கர், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய ஆசிரியர் எம்.ஆர்.பௌஸான் அஹமட், முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர் ஏ. எம்.ஆரிப், சஞ்சிகையின் சிரேஷ்ட ஆலோசகர் ரிப்கான்(நளீமி), சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய ஆசிரியரும் சட்ட இளமானியுமான ஹாதிக் இப்ராஹிம், சஞ்சிகையின் இணை ஆசிரியர்களான வவுனியா பல்கலைக்கழக மாணவன் ஜப்பார் ரோஷன் அக்தர், சம்மாந்துறை அல் அஷ்ஹர் பாடசாலையின் ஆசிரியர் ஏ.பீ.எம்.அஜ்வத் உட்பட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் சஞ்சிகை அறிமுக உரையினை தொடர்ந்து இணையாசிரியர்கள் பிரதம ஆசிரியரிடம் சஞ்சிகையினை கையளிக்க பிரதம ஆசிரியரால் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட் ஹனிபாவுக்கு சஞ்சிகையின் முதற் பிரதி வழங்கி வைக்கபட்டது. இவ்வாறு தொடர்ந்தும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அதிதிகளுக்கு சஞ்சிகையின் ஆசிரியர்களால் சஞ்சிகையின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.