சீனன்கோட்டையில் இஃப்தார் நிகழ்வும் பலஸ்தீன் மக்களுக்கான துஆ பிரார்த்தனையும்.
பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸப் குழுமத்தின் ஏற்பாட்டிலான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும், பலஸ்தீன மக்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் எதிர்வரும் 24 ஆம் திகதி (24-3-2024) மாலை பேருவளை பங்களாவத்த வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் சீனன்கோட்டை நலீமாஜியார் மாவத்தை தாஜுல் மபாஹிரிய்யா ஸாவியா மஸ்ஜிதின் பிரதம இமாம் மௌலவி முகத்தமுஷ்ஷாதுலி முஹம்மத் அஸ்லம் (முஅய்யதி) பலஸ்தீன மக்களுக்காக வேண்டி துஆப் பிரார்த்தனை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை.பி.எம்.முக்தார்)