சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று வாக்கெடுப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியினால் முன் வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் மூன்று நாள் விவாதத்திற்குப் பின் இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.