மீண்டும் நடுவருடன் முறன்பட்ட ஹசரங்க. தண்டனை கொடுத்த ஐசிசி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்தது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மிக முக்கியமான தருனத்தில் வனிந்து ஹசரங்கவினால் ஆட்டமிழப்பு முறையீடு செய்யப்பட அதனை நடுவர் இல்லை என அறிவித்திருந்தார். இதனால் அதிர்ப்தி அடைந்த ஹசரங்க நடுவரின் முடிவை கேலி செய்யும் விதமாகப் பேசியதுடன், நடுவரிடமிருந்து தொப்பியினை பறித்துச் சென்றார்.
இதனால் ஐசிசியின் வீரர்கள் நடத்தை பிரிவு 2.8 இற்கு அமைய ஹசரங்கவிற்கு 2 டெஸ்ட் போட்டிகள் அல்லது 4 ஒருநாள் அல்லது 4 ரி20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை வித்தித்ததுடன், போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தினை அபராதமாகவும் விதித்தது. இதனால் ஓய்விலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய ஹசரங்கவிற்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.