உள்நாடு

புத்தளம் நபுராவிற்கு சிறீ விக்ரமகீர்த்தி விருது

சமூக சேவையை கௌரவிற்கும் முகமாக இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ”மலையகம் 200 ” எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து எம் தீபன் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் புத்தளத்தைச் சேர்ந்த எம்.டி.எப் நபுரா சியாஜிற்கு சமூகசேவை செயற்பாட்டிற்கான சாதனையாளர் விருதாக ‘சிறீ விக்ரமகீர்த்தி ‘ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் சான்றிதழ், பதக்கம் மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இவ்விருது வழங்கல் விழாவின் பிரதம அதிதியாக முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கௌரவ அதிதியாக தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் டி. செந்தில்வேலவர் ஆகியோருடன் இன்னும் விசேட அதிதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புத்தளம் நகரில் சுமார் 06 வருடங்களுக்கு மேலாக சமூக சேவை பணியில் புத்தளம் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ”திரிய” பெண்கள் அமைப்பை 2018 ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் அமைப்பின் தலைவியாக இருந்து சங்க உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் பலவிதமான சேவைகளை செய்துள்ளதுடன் 2019 ம் ஆண்டு முதல் ‘ சைனிங் ஸ்டார்’ சிறுவர் கழகத்தை உருவாக்கி ‘பிரன்ட்ஸ்’ நிறுவத்தின் அனுசரனையுடன் இணைப்பாளராக செயற்பட்டு சிறுவர்களுக்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புத்தளம் வடக்கு கிராம சேவையாளர் பிரிவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் உப தலைவராக சேவையாற்றுவதுடன் 2015 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை புத்தளத்தில் உள்ள ‘மாற்றத்தை உருவாக்கும் மன்றம்’ என்ற அமைப்பின் நிர்வாக உறுப்பினராகவும் 2019 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை புத்தளம் பிரதேச செயலகத்தின் ஆயுர்வேத சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து வரும் இவர் பல்வேறு பட்ட ரீதியில் சமூக சேவை பணிகளையும் இவர் புத்தளத்தில் மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் விருது வழங்கும் விழாவில் நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 150 விற்பணர்கள் சிறீ விக்ரமகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்ப்பட்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *