விளையாட்டு

இலங்கை ‘ஏ’ அணியை எதிர்கொள்ளவரும் ஆப்கான் ‘ஏ’ அணி

இலங்கை ஏ கிரிக்கட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஒரு நான்கு நாள் டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் ஏ அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை வரவுள்ளது இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. இவ் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதுடன், நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மே மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

போட்டி அட்டவணை

1ஆவது ஒருநாள் போட்டி – ஏப்ரல் 28 – ஹம்பாந்தோட்டை
2ஆவது ஒருநாள் போட்டி – ஏப்ரல் 30 – ஹம்பாந்தோட்டை
3ஆவது ஒருநாள் போட்டி – மே 03 – ஹம்பாந்தோட்டை
4ஆவது ஒருநாள் போட்டி – மே 05 – ஹம்பாந்தோட்டை
5ஆவது ஒருநாள் போட்டி – மே 07 – ஹம்பாந்தோட்டை

ஒற்றை நான்கு நாள் டெஸ்ட் போட்டி – மே 11 முதல் 14 வரை – கொழும்பு பி. சாரா ஓவல்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *