வெலிப்பன்னை பிரதான வீதிக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான தொழுவற்கான மஸ்ஜித்..!
வெலிப்பன்னை பிரதான வீதிக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள பெண்கள் தொழுவற்கான மஸ்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை 08/03/2024 ஜும்ஆ தொழுகையின் பின் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 40 வருடங்களுக்கு முன் ஷாதுலியா தரீகாவின் ஆன்மீகத் தலைவர் டாக்டர் பாஜி ஷைகுஸ்ஸஜ்ஜாத் வெலிப்பன்னைக்கு முதன் முதல் விஜயம் மேற்கொண்டு சமயம் சீனங்கோட்டை மக்களால் வாங்கப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் காணி கதீப் மன்ஸுர் ஆலிமின் பெயரில் எழுதப்பட்டிருந்தது.
அவருடைய வபாத்துக்கு முன் உறுதிப்பத்திரம் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
பின் நீண்ட காலம் கைவிடப்பட்டிருந்த இந்த இடத்தில் துபாய் நாட்டைச் சேர்ந்த அரபிச்சகோதர் ஒருவரின் பணத்தால் அழகான ஒரு மஸ்ஜித் அமைக்கப்பட்டு ஜும்ஆ வும் நடைபெற்று வருகிறது.
தெற்கு அதிவேகப் பாதை அமைந்த பின் வெளியூர் மக்களின் வருகையும் கூடிவிட்டது. இதில் பெண்களும் அடங்குவர். பெண்களுக்கு தனிப்பட்ட இடம் இல்லாத காரணத்தால் பெண்கள் பல அசௌகரியங்களைச் சந்தித்தனர். இதன்காரணமாக பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு சில வசதிகளுடன் இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.
இதற்காக வெலிப்பன்னை மக்கள் அவர்களுடைய பணத்தால் கட்டடவேலைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் பாணந்துறை மல்டிலக் மிகுதியாய் இருந்த எல்லா வேலைகளையும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து முடித்துத்தந்தார்கள்.
(பேருவளை பீ எம் முக்தார்)