விளையாட்டு

டெஸ்ட் தொடருக்கான இரு அணிகளின் வீரர்கள் குழாம் அறிவிப்பு.- வனிந்து மீண்டும் சிவப்பு பந்துடன்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் விபரத்தினை இரு அணிகளும் நேற்று வெளியிட்டிருந்தன. அதற்கமைய இலங்கை அணி வெளியிட்டுள்ள குழாத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த வனிந்து ஹசரங்க இணைக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகைத் தொடரில் நிறைவுக்கு வந்துள்ள ரி20 தொடரை 2:1 என இலங்கை அணியும், ஒருநாள் தொடரை 2:1 என பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றிருக்க இதன் இறுதித் தொடரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கான அணி வீரர்கள் விபரத்தினை இரு அணிகளும் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது. அந்தவகையில் இலங்கை டெஸ்ட் அணியை தனஞ்சய டி சில்வா வழிநடாத்துகின்றார். மேலும் உலகின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க இலங்கை டெஸ்ட் குழாத்தினில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து மிலான் ரத்நாயக்க நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் முதன்முறையாக இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். ஏரனய வீரர்களின் எவ்வித மாற்றங்களும் இல்லை என்பதுடன் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்யூஸ், பிரபாத் ஜெயசூரிய, தினேஸ் சந்திமால், கசுன் ராஜித, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் நேற்றைய தினம் பங்களாதேஷ் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலம் இத் தொடருக்கான பங்களாதேஷ் அணியைப் பொறுத்தமட்டில் நஜ்முல் ஹுசைன் சான்டோ தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்களான முஸ்பிகுர் ரஹீம், மொஹ்மீனுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோருடன் சட்மன் இஸ்லாம், சதாத் ஹுகைன் போன்ற இளம் வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சகலதுறை வீரர்களாக மஹதி ஹசன் மிராஸ் மற்றும் ஹசன் ஜோய் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சு வரிசையில் சரீபுல் இஸ்லாம், டய்ஜுல் இஸ்லாம் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை டெஸ்ட் குழாம்

Dhananjaya de Silva (c) , Kusal Mendis (vc) , Dinesh Chandimal , Vishwa Fernando , Nishan Madushka , Chamika Gunasekara , Wanindu Hasaranga , Lahiru Udara , Prabath Jayasuriya , Dimuth Karunaratne , Lahiru Kumara , Angelo Mathews , Kamindu Mendis , Ramesh Mendis , Nishan Peiris , Kasun Rajitha , Sadeera Samarawickrama

 

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்

Najmul Hossain Shanto (c) , Khaled Ahmed , Litton Das , Mahmudul Hasan Joy , Mehidy Hasan Miraz , Mominul Haque , Musfik Hasan , Mushfiqur Rahim , Nahid Rana , Nayeem Hasan , Shadman Islam , Shahadat Hossain , Shoriful Islam , Taijul Islam , Zakir Hasan.

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *