இந்திய கிரிக்கெட் சம்பளப்பட்டியலில் இடம்பிடித்தார் சர்பராஸ்கான்
இந்திய கிரிக்கெட் சபையின் கடந்த மாதம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தது. இதில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவ்வாறு நீக்கப்பட்ட இடத்திற்கு அறிமுக இளம் வீரர்களான சர்பராஸ்கான் மற்றும் துருல் ஜுரல் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி அதிரடி வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் இருவரின் சம்பள ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை புதுப்பிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் சபையின் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்திய கிரிக்கெட் சபையின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பராஸ்கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற ஒரு வீரர் மூன்றுசர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அதந்கமைய இவ் இளம் வீரர்கள் இருவரும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினர். இதில் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதையடுத்து இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்திய ரூபா 1 கோடிக்கு சீ தர பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)