உள்நாடு

பெண்களாகிய எங்களுக்கு பொருத்தமான இடம் தீர்வுக்கட்டமான சமூக மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற திசைகாட்டியாகும்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

(லண்டன் பெண்கள் மாநாடு – 2024.03.16)

நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் எனும் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேண்டுமென நினைத்தேன். “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” என்ற தொனிப்பொருளில் ஏறக்குறைய 16 மாவட்டங்களில் நாங்கள் மாநாடுகளை நடாத்தினோம். இதுவரை கடந்துவந்த பயணம்பற்றி சற்று சிந்திக்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது 2019 இல் தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்படுகையில் இலங்கையின் அரசியல் பரப்பெல்லையில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்ற தருணமாகும். முதலில் நாங்கள் பெண்கள் சாசனமொன்றை முன்வைத்தோம். தோழர் அநுரவை தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக முன்வைத்தவேளையில் கொழும்பு பொது நூலகத்தில் கூட்டமொன்றை நடாத்தி அந்த பெண்கள் சாசனத்தை நாங்கள் அவரிடம் சமர்ப்பித்தோம். அவர் அதனை எற்றுக்கொண்டார். அத்தருணத்தில் இருந்து பெண்கள் சாசனம் தேசிய மக்கள் சக்தியின் அங்கீகாரத்திற்கு இலக்காகியது. பொதுத் தேர்தலில் பெண்களாகிய எங்களுக்கு 50% பிரதிநிதித்துவம் அவசியமென்பது விசேட கோரிக்கையாகும்.

தோழர் அநுர உரையாற்றகின்ற வேளையில் இந்த 50% பிரதிநிதித்துவத்துடன் இணங்குவதாகக் கூறினார். அதைப்போலவே மேடையில் இருந்த அத்தனை பெண்களையும் வேட்பாளர்களாக முன்வரத் தயாராகுமாறும் கூறினார். எமக்கு 50% தேவையெனக் கோரினாலும் பெண்களாகிய எமக்கு அரசியலில் ஈடுபடுவது அவ்வளவுதூரம் இலகுவானதல்லவென்பதை அத்தருணத்திலேயே விளங்கிக்கொண்டோம். சிலவிதங்களில் அரசியலுடன் தொடர்புபடுகின்ற நாங்களும் வேட்பாளர்களாக மாற இவ்வளவுதூரம் விரும்பாவிட்டால் எம்மெதிரில் இருக்கின்ற சவால் எத்தகையதென்பதை விளங்கிக்கொண்டோம். திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு எவ்வளவுதான் செயலாற்றினாலும் சாசனத்தை நடைமுறைச் சாத்தியமானதாக அமைத்துக்கொள்ள பெண்கள் அரசியலுக்கு வருதல் பற்றிய சவாலை வென்றெடுக்க வேண்டுமென்பதை விளங்கிக்கொண்டோம். அதோ அந்த உரையாடலுக்குள் நாங்கள் இவ்வளவுதூரம் பயணித்துள்ளதோடு ஏனைய கட்சிகளும் பெண்களை அரசியலில் சேர்த்துக்கொள்ளல் பற்றி சிந்திக்கத் தொடங்கின. “எமக்கு பூச்சாடியாகவேண்டிய அவசியமில்லை” என நாங்கள் முன்னர் கூறினோம். நிலவுகின்ற நிலைமையை மாற்றியமைத்திடவே நாங்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். ஒட்டுமொத்தமாக வன்முறைசார்ந்த, அருவருப்பான குறிப்பாக பெண்களாகிய நாங்கள் அருவருக்கின்ற அரசியலை மாற்றியமைத்திடவே நாங்கள் முன்வந்திருக்கிறோம். நிலவுகின்ற அரசியல் கலாசாத்தை மாற்றியமைத்து புதிய அர்த்தமொன்றைக் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அரசியல் பெரும்போக்கில் பிரவேசித்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்து முன்நோக்கி நகர்வதற்காக நாங்கள் தெரிவுசெய்த திசைகாட்டி அதற்குப் பொருத்தமான இடமென்பது இன்றளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எமக்கு அவசியமாவது தேர்தலில் வெறுமனே தலைகளை மாற்றுகின்ற அரசியலல்ல. பெண்களாகிய எங்களுக்கு பொருத்தமான இடம் தீர்வுக்கட்டமான சமூக மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற திசைகாட்டியே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது 2021 அளவில் அரசியலுக்கு மக்களின் பங்கேற்பினை பெற்றுக்கொள்வதற்காக வட்டார சபைகளை தாபிக்கத் தீர்மானித்தோம். கிராமத்தின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வட்டார சபைகளை நிறுவத் தொடங்கினோம். அடிமட்டத்தில் அரசியல் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கையின் 14,000 கிராம அலுவலர் பிரிவுகளில் ஏறக்குறைய பதினோறாயிரம் வட்டாரங்களில் வட்டார சபைகளை நிறுவி குறைந்தபட்சம் பதவிவகிப்போரில் 30% பெண்களை பங்கேற்கச் செய்விக்க தீர்மானித்தோம். இந்த சபைகளில் பெண்களின் பங்கேற்பினை பெற்றுக்கொள்வது ஆரம்பத்தில் மிகவும் சிரமமானதாக அமைந்தது. பல சவால்களுக்கு முகங்கொடுத்த பின்னர் தனிவேறாக பெண்கள் சபைகளை நிறுவ நாங்கள் தீர்மானித்தோம். நினைத்துப்பார்க்க முடியாதவகையில் பெண்கள் அதனைச்சுற்றிக் குழுமத் தொடங்கினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பானவகையில் பெண்களின் தலைமையின்கீழ் அரசியல் மேடையொன்று உருவாகும்வரை காத்திருந்த பெண்களின் பெரும்பான்மையினர் வியத்தகுவகையில் முன்வந்தார்கள். இலங்கையின் தொழில்களிலும், வீடுகளிலும், பொருளாதாரத்தின் பிரதான துறைகளிலும் அதிகமான சுமையை இழுப்பவர்கள் பெண்களே. இலங்கைக்கு டொலர்களை ஈட்டித்தருகின்ற பிரதானதுறைகளில் அதிகமான பங்களிப்பினை வழங்குபவர்கள் பெண்களே. எனினும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் நன்மதிப்பு கிடைக்கவில்லை. சம்பளம் பெறாமல் புரிகின்ற கவனிப்பு வேலைகள் வரவர கடினமானதும் துன்பமானதுமாக மாறியுள்ளன. இலங்கையில் சமூகப் பாதுகாப்பு படிப்படியாக கத்தரிக்கப்பட்டு வருகையில் அந்த சுமை பெண்களின் தோள்மீது சுமத்தப்பட்டது. உதாரணமாக கல்விக்காக அரசாங்கம் செலவிடுகின்ற வளங்கள் வெட்டப்பட்டு வருகின்ற நிலையில் பெண்கள்மீது சுமத்தப்பட்ட சுமையின் அளவு அதிகமானதாகும். அதைப்போலவே அரசாங்கம் பாடசாலை மாணவர்களின் பைகளில் போதைப்பொருட்களை பரிசோதிக்கின்ற அளவுக்குச் சென்றுள்ளது. அந்த சுமையும் பெண்களின் தோள்மீதே சுமத்தப்பட்டுள்ளது. மேலதிக வகுப்புகளுக்கு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போதலும் வருதலும் அம்மாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.

நான் இங்கு ஒரு துறையைப் பற்றி மாத்திரமே பேசினேன். கல்வி, சுகாதாரம், சுமூகப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்குலைதல் பெண்கள் மீதே அதிகளவான அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி வங்கிக்கடன் பெறக்கூடிய இயலுமை குறைவடைந்த நிலையில் நுண்நிதிக்கடன்களுக்கு பெண்களே இரையாகவும் துன்புறுத்தலுக்கும் இலக்காகினர். யுத்தம் மற்றும் கலவரங்களால் தோன்றிய அழுத்தங்களையும் பெண்களே அதிகமாக தாங்கிக்கொண்டிருப்பதோடு 2022 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையால் மேலும் பாரிய அடி விழுந்தது. கோல்பேஸ் போராட்டம் என அழைத்தாலும் நாடு முழுவதிலும் போராட்டங்கள் நிலவின. இந்த எதிர்ப்புகளின்போது முன்னணி வகித்தவர்கள் பெண்களே. இதயங்களில் தாங்கிக்கொண்டிருந்த மேலும் பொறுத்திருக்க முடியாத துன்பங்களின் மத்தியில் வீட்டுக்குள்ளே இருந்து வெளியில் வரத் தொடங்கினார்கள். ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் அந்த பெண்கள் ஒன்றுசேரக்கூடிய அரசியல் இடப்பரப்பொன்றை நிர்மாணித்து பெண்கள் சபைகளை தாபித்தோம். 2023 டிசம்பர் 30 ஆந் திகதி மாத்தறையில் தொடங்கிய கூட்டத்தின் பின்னால் ஒரு பாரிய செயற்பாங்கு இருக்கின்றது. நீங்கள் காண்கின்ற மிகவும் வெற்றிகரமான கூட்டத்தின் பின்னால் பலமாதக்கணக்கான பெரும்பாலான செயற்பாடுகள் கிராமிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுதலும் தலைமைத்துவம் வழங்கியதும் மூலமாக இந்த நிலைமை தோன்றியுள்ளது. எதிர்காலத்தில் மென்மேலும் பலமடைந்து கட்டியெழுப்பப்பட்ட நிறைவேற்றுக் குழுக்கள் கூடி திசைகாட்டியில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றன.

இலங்கையின் பெண்கள் இவ்விதமாக அவர்களின் தலைமைத்துவத்திற்கு இத்தகைய பலம்பொருந்திய செய்தியைக்கொடுக்க முன்வருவார்களென அவர்கள் ஒருபோதுமே நினைத்திருக்கவில்லை. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உன்னதமான விடயம் அதுவாகும். நாங்கள் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்திற்காக அணிதிரள்கின்ற மிகச்சிறந்த சக்தியும் அதுவாகும். பெண்களின் பலம், ஒன்றுசேர்ந்து ஒரே நோக்கத்தின்பால் முன்நோக்கி நகர்கின்றது. எமது நாட்டின் ஊழல்மிக்க அரசியல் கலாசாரம் சமூகச் சீர்குலைவு போன்ற எதிர்மறையான பல்வேறு நிலைமைகளுக்குள் மிகவும் உன்னதமான எதிர்பார்ப்பொன்றும் இருக்கிறது. பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் அணிதிரள்கின்ற தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது. இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பது தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்விக்கின்ற எளிமையான விடயமல்ல. 17 அந் திகதி இளைஞர் மாநாடு தொடங்குகின்றது. இது இலங்கை பிரஜையை உருவாக்கி அவர்களின் இடையீட்டுடன் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்ற பயணமாகும்.

வெளிநாடு சென்றுள்ள நீங்களும் இத்தருணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இலங்கையை மாற்றியமைக்கின்ற ஒரு தருணமாகக் எற்று செயலாற்றுங்கள். இனிமேலும் இருப்பவர்கள் மக்களை சுரண்டிவாழுகின்ற அரசியல் கலாசாரத்தை ஏற்றுக்கொள்கின்ற பிரஜையல்ல. இதனை விளங்கிக்கொள்ளாத அரசியல் கட்சிகள் அவர்களின் ஏமாற்றுவேலைகள் மூலமாக தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரஜைகள் இருப்பது வெறுமனே பொருளாதார நெருக்கடியொன்றை, அரசியல் நெருக்கடியொன்றை தீர்த்து வைத்தல் போன்ற குறுகிய இடத்திலல்ல. சமூக மாற்றத்திற்காக அணிதிரள்கின்ற இடத்திலாகும். இது நாட்டை புதிய பாதையில் மாற்றியமைப்பதற்காக ஒன்றுசேரவேண்டிய தருணமாகும். இந்த மாற்றத்தை எளிமையான கொள்கைகளால் ஏற்படுத்தவிட முடியாது. அந்த சமூக மாற்றத்திற்காக “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” நாட்டுக்குள்ளே மாத்திரமன்றி வெளிநாடுகளிலும்கூட அணிதிரண்டு கொண்டிருக்கிறோம். உடல்ரீதியாக இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்த மாற்றத்திற்காக பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கலாம். தொலைபேசி அழைப்பு, சமூக வலைத்தள செய்தியொன்றை வழங்கி இலங்கையில் இருக்கின்ற உங்களுக்கு நெருக்கமானவர்களை விழிப்புணர்வூட்டுங்கள். இந்த வருடத்தை நாட்டில் தீர்வுக்கட்டமான மாற்றமொன்றை புரிகின்ற வருடமாக மாற்றியமைத்திடுவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *