உலகம்

குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுது கொண்டிருந்த வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்..!

அஹமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுது கொண்டிருந்த வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி கும்பலொன்று நடாத்திய தாக்குதலில் இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் மாணவர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 300 மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலை. விடுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள் வழக்கம்போல் நேற்று இரவு தொழுகையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது விடுதி வளாகத்திற்குள் நுழைந்த ஒரு குழுவினர் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டதை எதிர்த்துள்ளனர். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த குழுவினர் மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் இலங்கை மற்றும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஒன்பது தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதடையே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *