நபி மற்றும் ரஷீட்கானின் அசத்தலால் அயர்லாந்துக்கு பதிலடி கொடுத்தது ஆப்கான்
அயர்லாந்து அணிக்கு எதிரான தீர்க்கமான 2ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் முஹம்மது நபியின் துடுப்பாட்டமும், ரஷீட்கானின் சுழலும் கைகொடுக்க 10 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை 1:1 என ட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று முன்சமன் செய்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போனிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் தீர்க்கமான 2ஆவது போட்டி நேற்று சார்ஜாவில் இரவுப் போட்டியாக இடம்பெற்றது. இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதற்கமைய களம் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முன்னிலை வீரர்களான குர்பாஸ் (3), இப்ராஹிம் சத்ரான் (5), இஸ்ஷாக் (0) மற்றும் ஒமர்ஷாய் (0) என வெளியேற 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான். பின்னர் இணைந்த சதீகுல்லாஹ் மற்றும் முஹம்மது நபி ஜோடி தமக்கிடையில் 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தது. கதீகுல்லாஹ் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முஹம்மது நபி அரைச்சம் கடந்து 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழ்ந்தார். பின்னர் வந்த ரஷீட்கான் தன் பங்கிற்கு 25 ஓட்டங்களை பெற ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்த 152 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் மார்க் அடெய்ர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 153 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குக் களம் நுழைந்த அயர்லாந்து அணிக்கு பல்பிர்னே மற்றும் ஸ்டெர்லிங் ஜோடி சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தது. இருப்பினும் ரஷீட்கான் பந்துவீச ஆரம்பித்ததுடன் அயர்லாந்து அணியின் விக்கெட்டுக்களை சரியத் தொடங்கியது. இதனால் அயர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. துடுப்பாட்டத்தில் பல்பிர்னே 45 ஓட்டங்களையும் , கரீத் டிலேனி 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் ரஷீட்கான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை 1:1 என சமன் செய்துள்ளது.
(அரபாத் பஹர்தீன்)