தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாற்றுவழி பிணக்கு தீர்வு செயலமர்வு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் முஸ்லிம் எய்ட் நிறுவனம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலையத்தோடு இணைந்து பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்களின் வழிகாட்டலுடன் கலைப்பீட கூட்ட மண்டபத்தில் கடந்த (09.03.2024) சனிக்கிழமை நடைபெற்றது.
இச் செயலமர்வில் பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையத்தின் பணிப்பாளர் Dr. எம்.அப்துல் ஜப்பார், சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், செயலமர்வின் வளவாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.றிஸ்வான் ஆகியோருடன் பிரிட்டிஷ் கவுன்சில் SEDR செயற்றிட்ட வளவாளர் நுஸரத் பெனாஸிர் பாரூக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
SEDR செயல்நிலை அமைப்பின் இலகுபடுத்துனர் ஏ.எச்.எஸ்.அஸ்மத்துள்ளா அவர்களினால் வசதி செய்யப்பட்டு அக்னிவில் குழுவின் தலைவர் எஸ்.ஹுஸ்னிஃ பாரிஜ் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டீக.லுஸாந் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.
இஸட்.ஏ.றஹ்மான்
திராய்கேனி நிருபர்