அமீர் அஜ்வாத்தை பாராட்டி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கெளரவிக்கும் நிகழ்வு..!
இலங்கையின் சவூதி அரேபியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அமீர் அஜ்வாத்தை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியரும் அரப் நியூஸ் கொழும்பு நிருபருமான மொஹமட் ரசூல்தீன் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார்.
கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்தீன் தூதுவரை வரவேற்று உரையாற்றினார். சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அமீர் அஜ்வாத்தும் இங்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பங்களாதேஸ், இந்தோனேசியா, நேபால் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டதுடன் விசேட அழைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மொஹமட் ரசூல்தீன் ஆகியோர் இணைந்து சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அமீர் அஜ்வாத்திற்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)