உள்நாடு

பொதுமக்களின் வேலைத்திட்டத்துடன் பொதுமக்களின் அரசாங்கத்தையே நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் உறுப்பினர் சுனில் ஹன்துன்னெத்தி

ஜனாதிபதி இடையீடுசெய்து அமைத்துக்கொண்ட ஐ.எம்.எஃப். உடன் கலந்துரையாடலில் நாங்கள் ஏன் பங்கேற்றகவில்லை எனும் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காகவும் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நிலைமைகள் பற்றிப் பேசுவதற்காகவும் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம். ஐ.எம்.எஃப். உடன் எமது ஆட்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து அறைகளில் செய்துகொண்ட உடன்படிக்கைகளை அமுலாக்குவதற்கு முன்னராக அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக செயலாற்றுகின்றவேளையில் நிவ்யோர்க்கில் ஐ.எம்.எஃப். உடனான பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள், கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயலாற்றியவேளையில் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அந்த பசில் ராஜபக்ஷ கள்ளத்தனமாக கைச்சாத்திட்ட உடன்படிக்கை தற்போது அமுலாக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவும் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் அவற்றை இணையத்தளங்களில் பிரசுரித்த பின்னரே நாங்கள் அவற்றை எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்த தொடங்கினோம். ரணில் விக்கிரமசிங்காக்கள் இந்த நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியதும் அவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதும் எதிர்க்கட்சியை சேர்ந்த எங்களுடன் கலந்துபேசி இணக்கப்பாட்டிற்கு வராமலேயே ஆகும்.

இப்போது அதன் விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் போனதன்பின்னர் மென்மேலும் நெருக்கடிக்குச்சென்று எம்மை பேச்சுவார்த்தைக்காக அழைப்பதில் அர்த்தமில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ த சில்வா பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த பேச்சுவார்த்தைக்காக எம்மை அழைத்துள்ளார்கள். இந்த நெருக்கடியில் இருந்து கரைசேர எம்மையும் பங்காளிகளாக ஆக்கிக்கொள்கிறது எனும் அபிப்பிராயத்தை சமூகமயப்படுத்தவே அரசாங்கம் முயற்சிசெய்கிறது. எம்மையும் சிக்கவைக்கவே முயற்சி செய்கிறார்கள். ஐ.எம்.எஃப். இற்கு எங்களுடனும் எங்களுக்கு ஐ.எம்.எஃப். உடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அவசியமெனில் அதற்கான வழிமுறையொன்று இருக்கிறது. இதற்கு முன்னரும் ஐ.எம்.எஃப். உடன் எமது பொருளாதாரப் பேரவை பேச்சவார்த்தையில் ஈடுபட்டது. மீண்டும் 14 ஆந் திகதியும் பேச்சுவார்த்தை நடாத்த முன்மொழியப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையை அங்காங்கே பொறுக்கியெடுத்து ரணில் விக்கிரமசிங்க பேசத்தொடங்கி உள்ளார். ரணில் விக்கிரமசிங்க குளியாபிட்டிய பொதுக்கூட்டத்தில் 2019 ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் முன்வைத்த ”தேசத்தின் எதிர்பார்ப்பு” கொள்கைப் பிரகடனத்தில் இருக்கின்ற முன்மொழிவுகள் நடைமுறைச்சாத்தியமானவையல்ல எனக் கூறினார். விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் கூட்டாக வீழ்த்திய நாட்டை மீட்டெடுப்பதற்காக எமது முன்மொழிவுகள் நடைமுறைச்சாத்தியமானவையல்ல எனக் கூறுபவர்கள் நாட்டைக் கடனாளியாக்கிய, இரண்டுகோடியே இருபத்தொரு இலட்சம் மக்களுக்கு இருப்பதற்கான நாட்டை இல்லாதொழித்த, நாட்டில் பிறக்கின்ற பிள்ளையை ரூபா 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு கடன்காரராக்கிய, கல்வியை சீரழித்தஇ இளைப்பாறியவர்களுக்கு ஒய்வுகால வாழ்க்கையை இல்லாதொழித்த ரணில் விக்கிரமசிங்காக்களும் ராஜபக்ஷாக்களுமேயாவர்

2018 மத்தியவங்கி அறிக்கை தரவுகளுடன் தொடர்புடையதாகவே நாங்கள் இந்த கொள்கைகளை தயாரித்துள்ளோம். அந்த தரவுகளுக்கிணங்க 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தின்கீழ் நாங்கள் நாட்டை மேம்படுத்துகின்ற விதத்தைக் கூறியிருக்கிறோம். மத்திய வங்கியைக் கொள்ளையடிக்கின்ற விதத்தில், சேமலாப நிதியத்தைக் கொள்ளையடிக்கின்ற விதத்தில் 2022 இல் நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்குகின்ற திட்டம் ரணில் விக்கிரமசிங்காக்களுக்கே தெரியும்.

மக்களை ஏமாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்காக்களுக்கு , சஜித் பிரேமதாசாக்களுக்கு இன்றும் புரியவேண்டியதாக இருப்பது கீழ்த்தரமான வேலைகளாகும். பத்து இருபது கிலோ அரிசியை பகிர்ந்தளிப்பதாகும். மக்களை பிச்சையேந்துகின்ற நிலைக்கு ஆளாக்கி, மீண்டும் அந்த கண்கட்டுவித்தையை காட்ட முனைகிறார்கள். எமது இந்த பொருளாதாரக் கொள்கைகள் புத்திஜீவிகளைக்கொண்ட சபையுடன் பொதுமக்களுடன் கலந்துரையாடி தயாரிக்கின்ற கொள்கைகளாகும். இவை பெரிதும் நடைமுறைச்சாத்தியமானவை. எந்தவொரு தோல்விகரமான இலக்கினையும் நாங்கள் எடுக்கவில்லை.

நாங்கள் இந்த நாட்டில் அமுலாக்குவது மக்களின் அரசாங்கத்துடனான மக்களின் வேலைத்திட்டத்தையாகும். நாங்கள் அனைவரும் பொருளாதார இலக்கிற்காக பொறுப்புக்கூறுவோம். ஒருசில ஊடகங்களில் வலுச்சக்தி பற்றிப் பேசி எம்மை கேலிசெய்துள்ளார்கள். எமது பெண்கள் விறகு அடுப்புக்களில் சமைக்க தயாராக வேண்டிவருமெனக் கூறுகிறார்கள். கொள்கைப் பிரகடனத்தில் 82 வது பக்கத்தில் வலுச்சக்தி தொடர்பான 23 நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளோம். அதிலொன்றுதான், உயிர் மூல சக்திவலுத் தோற்றுவாய்களின் (விறகு, தேங்காய் சிரட்டைக் கரி) பாவனை பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதோடு மேற்படி தோற்றுவாய்களின் பாவனை தொடர்பான உபகரணங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அடுப்பில் இறங்குவது என்பதல்ல. நாங்கள் 2019 இல் சமர்ப்பித்தது எதிர்வரும் மூன்று வருடங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய 23 செயற்பாடுகளையாகும்.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான விமர்சனம் இல்லாவிடத்து சொற்களைப் பொறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த கொள்கைகளை வாசியுங்கள். கலந்துரையாடுங்கள். 2024 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை சீராக்குகின்ற புதிய திட்டங்களை அமுலாக்கத் தயார். நாங்கள் அதுபற்றி கலந்துரையாடி வருகிறோம். தேசிய புத்திஜீவிகள் அமைப்பு மற்றும் கிராம மட்டத்திலான எங்களின் அமைப்பு ஒன்றுசேர்ந்து நாட்டுக்கான தேசிய கொள்கைத் தொடரைப் போன்றே ஊருக்கு, மாவட்டத்திற்குமான திட்டங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற உண்மையாக தீர்வுகளை அமுலாக்கக்கூடிய மிகவும் நடைமுறைச்சாத்தியமான கொள்கைத் தொடர் பற்றி மக்களுடன் உரையாடி வருகிறோம்.

”போகிற பேய் கூரையையும் பொத்துக்கொண்டு போவதைப்போல்” ரணில் விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் இந்த இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டின் வளங்களை விற்றுத்தீர்க்க தயாராகி வருகிறார்கள். அவர்களால் மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியாதென்பது அவர்களுக்குத் தெரியும். ஸ்ரீலங்கன் விமான சேவையை பழித்தொழித்து விற்றுத்தீர்க்க நிமல் சிறிபால த சில்வா முனைந்துவருகிறார். உலகின் மிகவும் பெறுமதியான பயணமுடிவிடத்தைக்கொண்ட ஸ்ரீலங்கன் விமான சேவை பற்றி நிமல் சிறிபால த சில்வா ஊடகங்களில் தோன்றி உலகத்தார் மத்தியில் அவநம்பிக்கையை எற்படுத்துகிறார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை சொச்சத்தொகைக்கு விற்றுத் தீர்ப்பதே அவருடைய பிரயத்தனமாகும். அதைப்போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன்மேட்டினை பொறுப்பேற்குமாறு திறைசேரியிடம் கோருகிறார். அவர்களின் ஊழல்மிக்க எயார் பஸ் கொடுக்கல் – வாங்கல், ராஜபக்ஷாக்களின் உறவினர்களை போட்டுக்கொண்டு நாய்க்குட்டிகளைக்கொண்டுவர விரயமிக்க விமானங்களை அனுப்பியவை இருக்கின்றன. எயார் பஸ் கொடுக்கல் – வாங்கலில் கபில சந்திரசேனாக்கள் இலஞ்சம் வாங்கியதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அம்பலமாகியதென்பதை நாங்கள் அறிவோம். அவை இந்நாட்டு மக்களின் கடன் அல்லது தண்டப்பணமல்ல. அந்த சுமையை திறைசேரியிடம் கையளித்து கொமிஷன் வாங்குவதற்காக நிமல் சிறிபால த சில்வாவிற்கு விற்கத் தயாராகி வருகிறார்கள்.

அத்துடன் மின்சார சபையை விற்பனை செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களை செயலிழக்கச் செய்வித்துஇ உரிமைகளை மிதித்து நசுக்கி, இலாபத்தில் இயங்குகின்ற மின்சார சபையை விற்கத் தயாராகி வருகிறார்கள். இந்நாட்டு மக்கள் அவரைத் தெரிவுசெய்ய மாட்டார்களென்பதை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவார். அதனால் மின்சார சபையை விற்று ஒருதொகைப் பணத்தை தேடிக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.

ரெலிகொம், கேஸ் முதலியவற்றறை விற்கத் தயாராகி வருகிறார்கள். மன்னார் வடிநிலத்தின் காற்றுவிசை மின்நிலையக் கருத்திட்டத்தை அதானிக்கு கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மன்னார் பற்றி விசேடமாக குறிப்பிடவேண்டியுள்ளது. அது மிகுந்த கூருணர்வுகொண்ட பிரதேசமொன்றாக சர்வதேசரீதியாக இனங்காணப்பட்ட இடம்பெயர் பறவைகள் வருகின்ற இடமாகும். வருடமொன்றில் ஏறக்குறைய 15 மில்லியன் இடம்பெயர் பறவைகள் இலங்கை ஊடாக பயணிக்கின்றன. அதனைக் கூறுவது ”குளோபல் பயோலொஜிகல் சென்டர்” ஆய்விற்கிணங்க வெளியிட்ட விடயமாகும்.

இலங்கையின் சுற்றாடலியலாளர்களும் சுற்றாடல் விஞ்ஞானிகளும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். அத்தகைய இடமொன்றில் காற்றுவிசை மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கப் போகிறார்கள். மக்கள் வசிக்கின்ற ஏறக்குறைய 10000 ஏக்கர் காணியை கையப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரித்துள்ளார்கள். 25 வருடங்களுக்கு 97 சதம் டொலர் விலையில் காற்றுவிசையைக் கொள்வனவுசெய்ய திட்டங்களை வகுத்துள்ளார்கள். இதனை தற்போது 22 சதம் டொலருக்கு கொள்வனவுசெய்ய முடியும். எமக்கு 2044 வரை கொள்வனவுசெய்ய வேண்டி நேரிடும்.

இந்த நாட்டின் பாராளுமன்றமோ நீதிமன்றமோ இந்நாட்டு மக்களோ இவற்றை இவ்வாறு விற்பதற்கான அதிகாரத்தை ரணிலுக்கு வழங்கவில்லை. அவர் மக்கள் ஆணையற்ற சனாதிபதியாவார். சனாதிபதி தேர்தலுக்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கையில் இவ்விதமான ஏலவிற்பனை சூதாட்டத்தில் ஈடுபடுவார்களாயின் பல எதிர்காலத் தலைமுறையினருக்கு பொறுப்புக்கூற வேண்டியுள்ள வலுச்சக்தி, விமான சேவை மற்றும் ஏனைய நிறுவனங்களை விற்கத் தீர்மானிப்பர்களாயின் இந்நாட்டு மக்கள் அதனை எதிர்க்க வேண்டும். அதைப்போலவே மக்கள் ஆணையற்ற ஓர் அரசாங்கத்திடமிருந்தே கொள்வனவு செய்ய முனைகிறார்கள். அடுத்து வரப்போவது மக்கள் ஆணையைக்கொண்ட அரசாங்கமாகும். மக்கள் ஆணையைக்கொண்ட அரசாங்கங்களிடம் மக்களின் பலத்தை முழுமையாகவே கையளிப்போம்.

நீங்கள் கொள்வனவுசெய்தவை பற்றி தீர்மானியுங்கள். அதனால் கொள்வனவு செய்வதற்காக கேட்புவிலை முன்வைப்பவர்களிடம் அது பற்றியும் கவனித்துப் பாருங்கள் எனும் கோரிக்கையை விடுக்கிறோம். இந்த ரணில் விக்கிரமசிங்க – ராஜபக்ஷ கூட்டு ஆட்சிக்கு இனிமேலும் எமது நாட்டின் வளங்களை விற்பதற்கான ஆணை கிடையாது. மக்கள் ஆணையை உரசிப் பார்ப்பதற்காக தயாராகிவருகின்ற இத்தருணத்தில் எந்தவொரு வழிமுறை ஊடாகவும் விற்கவோ கொள்வனவு செய்யவோ தயாராகி வருவார்களாயின் அந்த கொடுக்கல்-வாங்கலை அடுத்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடனேயே தீர்த்துக்கொள்ள வேண்டிநேரிடும். அதனால் இந்த கொடுக்கல் – வாங்கலுக்கு நீங்கள் தயாராகவேண்டாம். எமது நாட்டின் வளங்களை விற்கத் தயாராகின்ற இந்த கொடுக்கல் – வாங்கல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். விற்பதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு கிடையாது. தனியார் துறையை பலப்படுத்துவதென்பதும் அரச வளங்களை விற்பதென்பதும் ஒன்றல்ல: இரண்டு செயற்பாங்குகளாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *