நிந்தவூர் SKMS கராத்தே பாடசாலையின் கராத்தே தரப்படுத்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு
கடந்த திங்களன்று நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு அம்பாறை மாவட்ட SKMS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் எம்.டி.அஹமட் நிம்ஷி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கல்முனை இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரி மேஜர் ரூவன் மற்றும் ளுமுஆளு பாடசாலையின் தலைவரும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியருமான சிஹான் எம்.எஸ். வஹாப்தீன் மற்றும் கல்முனை பிராந்தியத்தின் விளையாட்டு ஊக்குவிப்பாளரும் சமூக சேவையாளரும் கல்முனை பெஸ்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏ.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் கௌரவ விருந்தினர்களாக அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அஹமட் ஹுஸைன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் USKU பிரதிநிதியும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாருமான N.ஸதாம் மற்றும் சுஹாரி கராத்தே சங்கத்தின் கராத்தே ஒருங்கிணைப்பாளர் ஏ.சீ.எம்.பிர்னாஸ் ஆசிரியர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
இந்நிகழ்விற்கு SKMS பாடசாலையின் நிந்தவூர் பிராந்தியம் மற்றும் பொத்துவில் பிராந்தியங்களிலிருந்து மாணர்கள் கலந்து கொண்டிருந்தனர். தரப்படுத்தல் நிகழ்வில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடந்த காலங்களில் கராத்தே போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு அதிதிகளினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.
மேலும் ருளுமுரு பணிப்பாளரும் எமது SKMS பாடசாலையின் தொழில்நூட்ப ஆலோசகருமான சிஹான் இஸட்.ஏ.ரவூப் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.