நாணயச்சுழற்சியில் இலங்கை வெற்றி. முதலில் பந்துவீசத் தீர்மானம்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்க்கமான 2ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரான குசல் மென்டிஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளார்.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியின் நாணயச்சுழற்சியிலும் குசல் மென்டிஸ் வெற்றி பெற்றிருந்ததுடன் அப் போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார். இருப்பினும் இலங்கை அணி அப் போட்டியில் தோல்வியுற்றிருந்தது. இந்நிலையில் இன்றைய 2ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்திருப்பது இலங்கை அணிக்கு வெற்றியின் சாதகத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களம் கண்டுள்ளது. நட்டச்சிர சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்சனவிற்கு பதிலான சுழற்பந்து சகலதுறை வீரரான துனித் வெல்லாலகே யை அணியில் இணைத்துள்ளது. மேலும் பங்களாதேஷ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஆடும் பதினொருவர் அணி.
1 Pathum Nissanka, 2 Avishka Fernando, 3 Kusal Mendis (capt & wk), 4 Sadeera Samarawickrama, 5 Charith Asalanka, 6 Janith Liyanage, 7 Wanindu Hasaranga, 8 Dunith Wellalage, 9 Pramod Madushan, 10 Dilshan Madushanka, 11 Lahiru Kumara
பங்களாதேஷின் ஆடும் பதினொருவர் அணி.
1 Soumya Sarkar, 2 Litton Das, 3 Najmul Hossain Shanto (capt), 4 Towhid Hridoy, 5 Mushfiqur Rahim (wk), 6 Mahmudullah, 7 Mehidy Hasan Miraz, 8 Tanzim Hasan Sakib, 9 Taskin Ahmed, 10 Taijul Islam, 11 Shoriful Islam