விளையாட்டு

கிண்ணத்தை சுவீகரித்தது ஹமீட் அல் ஹுஸைனி..!

கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களினால் வருடா வருடம் பாடசாலைக்களுக்கிடையில் ஒழுங்கு செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி இம்முறையும் கொழும்பில் இடம்பெற்றது.

ஹமீத் அல் ஹூசைனியா ஒக்ஸ்போட் குழு இறுதிப்போட்டி ஜனாதிபதி கின்னத்திற்கான கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த 06.03.2024 இறுதிச் சமர் நடைபெற்றது. இச் சமரில் ஹமீத் அல் ஹூசைனியா எதிர் கல்கிசை சென்தோமஸ் அனிக்கும் கொழும்ப ஹமீத் அல் ஹூசைனியா 3 -0 என்ற ரீதியில் சிறப்பான வெற்றி பெற்று ஜனாதிபதி சம்பியன் கின்னத்தினை வெற்றிபெற்றது. .

இந் நிகழ்வின்போது கின்னத்தினை கையளிக்கும் வைபவத்தில் ஜனா திபதியின் பிரத்தியோகச் செயலாளர் சாகல ரத்னாயக்க், கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் கிறிக்கட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க கல்லுாரி அதிபர் பழைய மாணவர்கள் அனுசரனையாளர்களும் ஆகியோர்கள் இணைந்து வெற்றிக்கின்னத்தினை ஹமீத் அல் ஹுசைனியா உதைபந்தாட்ட குழுவின் தலைவரிடம் கையளித்தனர் அத்துடன் ரனர்அப் கின்னத்தினை சென் தோமஸ் கல்லுாாியின் தலைவரிடம ்கையளிததனர்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *