உள்நாடு

லஹிரு திரிமான்ன வாகன விபத்தில் காயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான லஹிரு திரிமான்ன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இடதுகை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன தற்சமயம் லெஜன்ட் ரி20 தொடரில் நியூயோர்க் ஸ்டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். அதற்கமைய நேற்றைய தினம் பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு இடம்பெற்ற கண்டி சம்ப் ஆர்மி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் அனுராதபுரம் , திரிப்பன்ன 177ஆவது மைல்க்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அவர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பயணித்த மூவர் உட்பட சாரதியும் இவ்விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்கள் பயணித்த வாகனம் பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *