உள்நாடு

சிறைக்கைதிகளும் நோன்பு நோற்க களுத்துறை கிளை ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாடு..!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்கு, ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்காகவும், நோன்பு துறப்பதற்காகவும் தேவையான உலர் உணவுப்பொருட்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் ஜனாஸா சேவை சங்கத்தின் களுத்துறைக் கிளை வழங்கியது.

முஸ்லிம் வர்த்தக நிலைய தனவந்தர்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள், அண்மையில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
அரிசி, பருப்பு, சீனி, பேரீச்சம்பழம் கருவாடு, டின்மீன், மா மற்றும் பல தேவையான இதர வகைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
பேருவளை பிரதேச சபையின் சமூர்த்தி கணக்காய்வாளரும் இச்சங்கத்தின் தலைவருமான எம்.எம்.எம். சியான், பேருவளை மஹகொடை அஹதிய்யாத் தலைவரும் சங்க உப தலைவருமான ரியாஸ்தீன் இமாம்தீன், பேருவளை இக்ரஃ தொழில்நுட்பக் கல்லூரியின் விரிவுரையாளரும் சங்கத்தின் செயலாளருமான ரியாஸி மௌசூன், பேருவளை மஹகொடை ஐ.எல்.எம். சம்சுதீன் கல்லூரியின் அஹதிய்யா தலைவரும் இயக்கத்தின் உப தலைவருமான பீ. எஸ்.எம். சியாஸ், இணைப் பொருளாளர்களான சுஹைர், ஹஜ் டிரவல்ஸ் உரிமையாளர் ஏ.பீ.எம். சுஹைர், சிட்டி எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் இக்பால் சம்சுதீன், உதவிப் பொருளாளரான சமூக சேவை ஆர்வலர் எம். எஸ். எம். ரமீஸ் மற்றும் ஜனாஸா சங்கத்தின் பெண்கள் பிரிவினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *