உள்நாடு

சாய்ந்தமருது அல்ஹிலாலில் புலமைச் சிட்டுக்களுக்கு கௌரவம்..!

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இம்முறை (2023) இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் Glittering Scholars -2023 நிகழ்வு வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் (09)  சனிக்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல்.நசார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அதிதிகளால் மாலை அணிவித்து, மகுடம் சூட்டி,  கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன் தலைமையிலான மருதூர் கலைமன்ற பொல்லடி  குழுவினர் மற்றும் பேண்ட் வாத்திய குழுவினரால்  வரவேற்பு மற்றும் கௌரவம் அளிக்கப்பட்டு மாணவர்கள் வீதி வழியாக அழைத்து வரப்பட்டனர்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் நிகழ்வில் கௌரவ அதிதியாகவும் அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்,  பிரதிக் கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், திருமதி எம்.எச். றியாஸா, சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம். அப்துல் மலிக், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக் ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் மற்றும் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார், சாய்ந்தமருது சிங்கர் ஷோரூம் உரிமையாளர் எஸ்.எச். ஜிப்ரி, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ. பாவா உட்பட  பிரதேசத்தின் இதர பாடசாலை அதிபர்களான எம்.ஐ.எம்.இல்யாஸ், எம்.எஸ்.எம்.ஆரிப், எம்.ஐ. சம்சுதீன், எம்.எஸ். நபார் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மற்றும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள், பாடசாலைக்கு தன்னால் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதிபடத் தெரிவித்தார்.
நிகழ்வில் புலமையில் சாதனை நிலை நாட்டிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள், வெற்றிக்கேடயங்கள், புத்தகப்பைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல்.நயீம் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *