விளையாட்டு

களைகட்டிய அல் பத்ரியா இல்ல விளையாட்டுப் போட்டிகள்

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 9ஆம் சனிக்கிழமை கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹ்மான் அவர்களும், விஷேட அதிதியாக அல் ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ் ஷெய்க் எம்.ஏ.ஏ. நூருல்லாஹ் (நளீமி) அவர்களும், கௌரவ அதிதியாக அஷ் ஷெய்க் எம்.டி.எம். தவ்ஸீர் (SLEAS) அவர்களும் இன்னும் பல விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வருடம் கமர் இல்லம் முதலிடத்தைப் பெற்று செம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டதுடன், இரண்டாம் இடத்தை நஜ்ம் இல்லமும், மூன்றாம் இடத்தை ஷம்ஸ் இல்லமும் பெற்றுக்கொண்டன. பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களால் மைதானம் நிரம்பி வழிந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(ஹிஷாம் றாஸிக்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *