ரமழான் பிறை தென்பட்டது. நாளை முதல் நோன்பு ஆரம்பம்
ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று மாலை இடம் பெற்றபோது நாட்டின் பல பாகங்களில் தலைப்பிறை தென்பட்டதால் புனித ரமழான் மாதம் இன்று மாலையுடன் ஆரம்பமாவதுடன் நாளை அதிகாலை புனித நோன்பினை இலங்கை வாழ் மக்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.
ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு இன்று திங்கள் கிழமை மாலை மஹ்ரிபு தொழுகைiயைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போதே நாட்டின் பல பாகங்கிளலும் பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைத்ததால் பிறைக்கு குழு நாளை 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாவதாக அறிவித்துள்ளது.
மேற்படி பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நிர்வாகிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்களப் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் மற்றும் ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதி நிதிகள், மேமன் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)