விளையாட்டு

ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும், உத்தரவாதமளிக்கப்பட்ட 13 வருட தொழில் கல்விக்கான அறிவிப்பும்

பாணந்துறை, ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை (09.03.2024) பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் கெளரவ அதிபர் எஸ்.எச்.முத்தலிப் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

கெளரவ அதிதிகளாக களுத்துறை கல்வி வலயத்தின் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் கெளரவ M.T.M. இல்யாஸ் அவர்கள், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ லலித் எல்லாவல அவர்கள், இலங்கை கராத்தே சங்கத்தின் மேல் மாகாணத்திற்கான தலைவரும் ஜப்பான் சிட்டா ரியோ சங்கத்தின் இலங்கைக்கான தலைவரும் சர்வதேச கராத்தே சங்கத்தின் பயிற்றுவிப்பாளரும் நடுவருமான சிஹான் பீ அனுர பிரியங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், உதவி அதிபர்கள்இ ஆசிரியர்கள் சேவை ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்கத்தினர், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர், சமூக சேவையாளர்கள், நலன் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நேற்றைய இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல அவர்களினால் முக்கிய செய்தி வழங்கப்பட்டது. பாணந்துறை பிரதேசத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளிலே, உத்தரவாதமளிக்கப்பட்ட 13 வருட தொழில் கல்வி (13+) ஆரம்பிக்கப்படும் முதற் பாடசாலையாக ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான அங்கீகாரம் மேல் மாகாண ஆளுநர் பணிமனை மற்றும் மேல் மாகாண கல்வியமைச்சினால் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல பிரகடனம் செய்தமை ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தின் வரலாற்றில் புதியதொரு மைல் கல்லாகவும் சாதனையாகவும் எழுதப்படுகிறது.

உத்தரவாதமளிக்கப்பட்ட 13 வருட தொழில் கல்வியை ஹொரேதுடுவை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பிப்பதற்கு முழுவீச்சுடன் இயங்கிய மற்றும் பாடுபட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல, பாடசாலையின் கெளரவ அதிபர் S.H. முத்தலிப், உதவி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி சங்கத்தினர் (SDES) என சகலருக்கும் ஊர் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

(அஷ்ரப் ஏ சமட்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *