உள்நாடு

கடந்த ஆண்டு வாகனப் பதிவு அதிகரிப்பு

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களின் இடையே வாகன பதிவு 23.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 19218 வாகனங்களும், 2023ஆம் ஆண்டில் 23698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மோட்டார் சைக்கிள் பதிவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் பதிவுகள் 8363 ஆக இருந்ததுடன் இது கடந்த 2023ஆம் ஆண்டு 16869 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த வருடம் 636 பேரூந்துகள் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *