gastroenterology குடல் இறக்கம் நோயாளிகளுக்கு கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையினால் வழங்கப்படும் இலவச கிளினிக் சேவை..!
இலங்கையில் பிறந்த குழந்தை முதல் 14 வயது வரை கெஸ்ரிக், gastroenterology குடல் இறக்கம் நோயின் பாதிப்பு உணரப்படுகிறது.
இதற்கான சிகிச்சை நிலையம் 2022 ஆண்டிலிருந்து கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இயங்கி வருகின்றது.
இதற்காக இவ் வைத்தியசாலையில் உள்ள சிறுவர் வைத்திய நிபுணர்கள், ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இத்துறை சம்பந்தமான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியரும், இத்துறை சார்ந்த தாதியரும் சமன் ரன்டிராஜத் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.
சமிபாடின்மையால் வயிற்றின் மேல் பகுதியில் உள்ள அசௌகரியம் அல்லது வலியால் இது வகைப்படுத்தப்படும், இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) அல்லது வயிற்றுப் புண்களைக் குறிக்கலாம். மஞ்சள் காமாலை, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல், கல்லீரல் செயலிழப்பு மற்றும் ஹெபடைடிஸ் அல்லது பித்தநீர் அடைப்பு போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். வாந்தியெடுத்தல், இரைப்பை குடல் அழற்சி, இரைப்பை புண்கள் அல்லது குடல் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு இரைப்பை குடல் பிரச்சினைகள் உணரப்படலாம். இரத்த வாந்தி, உணவுக்குழாய் மாறுபாடுகள் போன்ற நிலைமைகள் இதனோடு தொடர்புடைய தீவிர அறிகுறியாகும்.
இதற்காகவே விசேட வைத்திய நிபுணர்களோடு இணைந்து இந் நோயைக் குணப்படுத்துவதற்காக வைத்தியத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளரான பேராசிரியர் சமன மற்றும் கலாநிதி சி.வி ரத்சலா ஆகியோர்கள் இணைந்து இலங்கையில் சிறுவர் சிகிச்சையில் செயற்பட்டு வருகின்றனர்.
கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையின் gastroenterology clinic இனால் வழங்கப்படும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள, நோயாளிகள் லேடி றிஜ்வே வைத்தியசாலையின் அறை எண் 39 க்கு சமூகமளிக்க முடியும்.. விசாரணைகள் மற்றும் முன்பதிவுகளுக்கு 075 3464313 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக நேரடியாக கிளினிக் இனை தொடர்பு கொள்ள முடியும். இந்த கிளினிக் ஆனது பிரதி வியாழக்கிழமைகளில் காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை இயங்கும் என்பதோடு நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் வருகை தருவதன் மூலம் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.. மேலும் தூரப் பிரதேசத்திலிருந்து வரும் நோயாளிகள் அல்லது வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்கள் இந்த சேவையை பெற தமது உள்ளூர் வைத்தியரின் பரிந்துரைகளுடன் சேவையை நாடுவது விரும்பத்தக்கது..
சாதாரணமாக தனியார் வைத்தியசாலையில் upper Gastoenrology 1 இலட்சம் மேலும் Lower Gastoenrology 1 இலட்சத்து 30 ஆயிரம், குழந்தை சுகாதார பராமரிப்பு 65 ஆயிரம் என பெரும் தொகைகள் அறவிடப்படும் நிலையில், இச் சேவை இங்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது. இருந்தும் சில வைத்திய சிகிச்சை மருந்து வகைகள் வெளியில் இருந்தே பணம் செலுத்தி வாங்க வேண்டி ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ சமத்)