உள்நாடு

சீனன்கோட்டை அக்கர தாஅட்ட பள்ளிமாடி திறப்பும் வக்பு செய்யும் நிகழ்விலும் சிங்கள மக்கள் பங்கேற்பு..!

வக்பு செய்யப்பட்ட இடங்களுக்கோ சொத்துக்களுக்கோ சொந்தக்காரன் அல்லாஹ்தான். எனவே வக்பு உடைமைகளை எவராலும் விற்க முடியாது.என்று வெலிகம கபுவத்த ரிபாயியா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அப்துல்லா (ரௌலி) கூறினார்.

பேருவளை சீனன்கோட்டை, அக்கர தாஅட்ட பதினெட்டு ஏக்கர் என்ற இடத்தில் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலின் 2 ஆம் மாடி அமைக்கப்பட்டு கடந்த 8-3-2024 இல் வக்பு செய்யப்படும் நிகழ்வு இடம் பெற்றது. கலீபத்துஷ் சாதுலி மௌலவி எம்.எம்.செய்னுல் ஆப்தீன் பஹ்ஜியினால் நடர்த்தப்பட்ட வக்பு நிகழ்வினைத் தொடர்ந்து, சினன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் ஏ.எச்.எம்.முக்தார் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும் போதே மௌலவி அப்துல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கூறியதாவது,

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசல் ஆகும். அது ஒழுக்கம் நிறைந்த இடமாகும். கண்ணியம் பேணப்படும் இடமாகவும் உள்ளது. வம்பிழக்கும் கடைத் தெருவே அல்லாஹ்வுக்கு வெறுப்பான இடம் ஆகும். தொழுகைக்காக பள்ளியை நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நன்மைகள் எழுதப்படுகின்றன.

பள்ளியை கட்டிக் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கொடுக்கிறான். அதேபோன்று பள்ளியை நிர்வகிப்பவர்கள் அல்லாஹ்வின் அடுத்த வீட்டுக்காரர்களாக கணிக்கப்படுகிறார்கள்.அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்துகிறான். எங்களுக்குள் ஒற்றுமை நிலவ வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வின் உதவிகள் வந்தடையும் என்றார்.

சினன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர் அஷ் செய்ஹ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் நலீமி யின் அறிமுக உரையின் போது,

எமது விழாவில் ஒவ்வொரு விடயத்திலும் ஒவ்வொரு வரலாறு இருக்க வேண்டும். அது பின்னால் வரும் சந்ததியினருக்கு பாடமாகவும் வழிகாட்டியாகவும் அமைகிறது.அந்த வகையில் இந்த அக்கர தாஅட்ட என்ற குக்கிராமம் மர்ஹூம் ஸாலி ஹாஜியாருக்குறிய இடமாகும். அவரது குடும்ப வாரிசுகளில் ஒருவரான ஹிகம் ஹாஜியாரால் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 12 1/2 பேச் நிலப் பகுதியிலே கடந்த 2023-3-19 இல் பள்ளி நிர்மாணம் பெற்று வக்பு செய்யப்பட்டது. ஒரு வருடத்தில் அதன் இரண்டாம் மாடியும் நிறைவு பெற்று இன்று திறப்பு நிகழ்வும் வக்பு செய்யும் நிகழ்வும் இடம் பெற்றுள்ளது. பள்ளியினுள் பேனப்படும் தக்வா,வெளியிலும் பேணப்பட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் பணி நிறைவ வேற்றப்படுகிறது.

இந்நிகழ்வில் ஹிகம் ஹாஜியார் தலைமையில் 10 பேர் கொண்ட நிர்வாகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதமும் கையளிக்கப்பட்டது.

பெருந்திரனான பிரதேச மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்,சங்க இணைச் செயலாளர் எம்.எம்.சிஹாப் ஹாஜியார் சீனன்கோட்டை குர்ஆன் மதாரிஸ் பணிப்பாளர் மௌலவி எம்.டபிள்யூ.எம்.பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி) ஜாமிஅத்துஸ் பாஸியத்துஷ் ஷாதுலி கலாபீட முதல்வர் மௌலவி எம்.அஸ்மிகான் (முஐயதி)…

உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அயலிலுள்ள சிங்கள பௌத்த சகோதரர்கள் பலரும் பள்ளி நிகழ்வில் வருகை தந்து ஒத்துழைப்புத் தந்த நிகழ்வும் சிறப்புடன் பெறுகிறது.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *