உள்நாடு

குருநாகல் மாவட்டத்தின் பிரபல இளம் அரசியல் பிரமுகர் பாஹிம் கவுஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக கட்சியின் உயர் பீடத்தால் நியமனம்..!

முன்னால் குருனாகல் பிரதேச சபையின் உறுப்பினரும் சமூக சேவையாளருமான பாஹிம் கெளஸ் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் குருனாகல் மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது இந்த நியமனம் தொடர்பில் குருநாகல் பிராந்திய முஸ்லிம் மக்கள், சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியன ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கும் உயர் பீட உறுப்பினர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குருநாகல் வாழ் மூவின மக்களின் பேரபிமானத்தை வென்ற இளம் துடிப்பு  மிக்க அரசியல் செயல்பாட்டாளரான பாஹிம் கவுஸ் அவர்கள் குருநாகல் மண்ணில் பாரிய அபிவிருத்தி பணிகளையும் தேசிய கட்சி அரசியலுக்கு அப்பால் புரிந்து வருகின்றமையும் பாராட்டுக்குரியது.

அத்துடன் குருநாகல் பிரதேசத்தின் அதி முக்கிய தேவைகள் அறிந்து முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேசி அலவத்துவெல அவர்கள் ஊடாக குடி நீர் திட்டம் ,மற்றும் உள்ளூர் வீதி அபிவிருத்தி , இளைஞர்களுக்கான தொழில் வழி காட்டல்  பயிற்சிகள் என பல அபிவிருத்தி பணிகளையும் மெற்கொண்டு வருகின்றமையும் பாராட்டுகுரியது.

இவரின் நியமனம் கடந்த வியாழக் கிழமை 03.07.2024 அன்று ஐக்கிய  மக்கள் சக்தியின் செயலாளர் கெளரவ ரன்ஞித் மத்தும பண்டாரவினால் வழங்கிவைக்கப்பட்டது.

பாஹிம் கவுஸ் பிரதேச சபை உறுப்பினராக பல சேவைகளைச் செய்தது போல் இந்த அங்கீகாரத்தால் இன்னும் பல சேவைகளை குருநாகல் மாவட்ட மக்களுக்காக செய்ய  காத்திருக்கிறேன் உங்கள் ஆதரவிற்கு நன்றி என இந்த நியமனம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் முன்னாள் குருநாகல்  பிரதேச சபையின் உறுப்பினர் பிரபல அரசியல் பிரமுகர் மர்ஹூம் கவுஸ் அவர்களின் சிரேஷ்ர புதல்வர் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *