காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம்..!
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று நேற்று(08) வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஜாமிஉஸ் சலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் மட்டக்களப்பு சலாமா பவுண்டேஷன் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆகியவை இணைந்து காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு வேலை திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது டன் எதிர்கால வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.
காத்தான்குடி குடி ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு ஜனாஸாக்களை வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய வெளி ஊர்களில் இருந்து ஏற்றுவதற்கு வசதியான வாகனம் ஒன்றை பெறுவது தொடர்பாகவும் இங்கு ஆலோசனை முன் வைக்கப்பட்டு அதை பெற்றுக் கொள்ள அதற்கான உதவியும் இதன் போது கோரப்பட்டது.
இந்த கூட்டத்தின் வரவேற்புரையையும் தலைமை உரையையும் காத்தான்குடி ஜனாஸா நலம்புரி அமைப்பின் ஆலோசகர் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.ரிஸ்வான் மதனி நிகழ்த்தினார்.
சிறப்புரையை அஷ்ஷெய்க் அபூபக்கர் அக்ரம் நழீமி நிகழ்த்தியதுடன் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் சபையின் செயலாளர் மௌலவி சவாஹிர் அல் ஹாபிழ் நாசர் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஹாரூன் ரஷாதி காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ் எச் அஸ்வர் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் உளமா சபை பிரதிநிதிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வர்த்தகர்கள் சலாமா பவுண்டேஷன் நிர்வாகிகள் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எம் எஸ் எம் நூர்தீன்)