உள்நாடு

கஹட்டோவிட்ட பத்ரியாவின் இல்ல விளையாட்டு போட்டி இறுதி நாள் நிகழ்வுகள் இன்று..!

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பத்ரியா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. அதிபர் எம் ஏ எம் அஸ்மிர் தலைமையில் நடைபெறவுள்ள இவ் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானும் விஷேட அதிதியாக அல்ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம் ஏ ஏ நூருள்ளாஹ்வும்(நளீமி) கெளரவ அதிதிகளாக அத்தனகல்ல கல்வி காரியாலய பணிப்பாளர் ஏ எச் ஏ எதிரிசிங்கவும் , கம்பஹா கல்வி வலய தமிழ் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம் ரீ எம் தெளஸீர்(நளீமி),உதவிப் பணிப்பாளர் (விளையாட்டு) எச் டி ஏ டி மனோஹர ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். கமர்,ஷம்ஸ்,நஜ்ம் ஆகிய இல்லங்களுக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற போட்டிகளின் இன்றைய இறுதி நாள் நிகழ்வுகளை வெகு விமரிசையாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளையும் பாடசாலை அதிபர் ஆசிரியர் குழாம் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவிகள் சங்கம் அபிவிருத்தி சங்கம் நலன்புரி சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *