கொழும்பு பாத்திமாவில் நான்கு மாடிக் கட்டிடம் திறப்பு..!
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாாியின் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் உயர்தரம் கற்கின்றனர் அத்துடன் கொழும்பு வாழ் 2500 முஸ்லிம் மாணவிகள் இங்கு கல்வி பயிலுகின்றனர்.
இக் கல்லுாரியின் உயர் தர மாணவிகளுக்காக 4 மாடிகளில் 12 வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் இன்று 07.03.2024 கல்லுாாியின் அதிபர் திருமதி மும்தாஜ் பேகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இக் கட்டிடத்திற்காக மேல்மாகண சபை 2017ஆம் ஆண்டில் 35 மில்லியன் ருபாவை ஒதுக்கி அடிக்கல் நாட்டியபோதிலும் கட்டம் 1,கட்டம் 2 மட்டுமே பூரணப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டின் நிதி நிலைமையினால் அவை இடை நடுவில் விடப்பட்டிருந்தன. இருந்த போதிலும முன்னாள் அதிபர் ஸிஹானா அஸ்லம் பிரதி அதிபர் கைருன் நிசா கல்லுாரி பழைய மாணவிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியோர்களின் அயராது முயற்சியினால் கொழும்பில் உள்ள முஸ்லிம வர்த்தக அனுசரனையாளர்களை அனுகி இக் கட்டிடம் பூரணப்பட்டு மாணவிகளிடம் கையளிக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் . பாராளுமன்ற உறுப்பிணர் ஏ.எச்.எம் பௌசி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்சத் நிஜாமுத்தீன் ஆகியோர்களுடன்
அனுசரனையாளர்கள் லைட் லைப் ஸ்தாபகர் ஜெயினுலாப்தீன், எம்.எஸ்எம். ஷாஸில், அல்ஹாஜ் யெகியா சாதீக், அப்துல் கபூர் நஸ்ருன், எம்.எஸ்.எம். ஸஹ்ரி, ஆகியோர்கள் முன்வந்து நன்கொடையின் மூலமாக 3 ஆம் 4ஆம் கட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டடு இவ் வேலையைத் திட்டம் முடிக்கப்பட்டது.
(அஷ்ரப் ஏ சமத்)