உள்நாடு

அல் மின்ஹாஜின் சம்பியனாக மகுடம் சூடியது சபா இல்லம்..!

மதுரங்குளி பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நடப்பாண்டின் இல்ல விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் சம்பியன் மகுடத்தினை தனதாக்கியது.

பெருக்குவட்டான் எனும் எழில் கொஞ்சும் கிராமத்தின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எச். டி. அன்சார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த 6 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப் பாடசாலையில் சபா, மர்வா மற்றும் மினா என 3 இல்லங்களாக மாணவர்களும் ஆசிரியர்களும் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நடப்பாண்டில் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் சம்பியன் மகுடத்தினை சபா இல்லம் தனதாக்கி அசத்தியது.

இரண்டாம் இடத்தினை மினா இல்லம் பெற்றுக் கொள்ள 3ஆம் இடம் மர்வா இல்லம் வசமானது. இந்நிகழ்வில் அதிகளவிலான அதீதிகள் பங்கேற்றிருந்ததுடன் , இப் பாடசாலையின் பழைய மாணவ, மாணவியர் ம்ற்றும் மற்றும் பெற்றோர்கள் என அதிகமானோர் வருகை தந்திருந்தனர்.

மேலும் இவ் இறுதி நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய சீருடை அறிமுகம் இடம்பெற்றதுடன். அச் சீருடை அதிபருக்கும் பழைய மாணவர் சங்க நிறுவாக உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

 

(அரபாத் பஹர்தீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *