உள்நாடு

மதவாக்குளம் முஸ்லிம் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி 2024

எமது மதவாக்குளம் முஸ்லிம் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் 2024 ஆம் வருடத்தின் 55 ஆவது இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் 05-03-2024 அன்று செவ்வாய்க்கிழமை பி.ப 01.00 மணிக்கு கௌரவ அதிபர் என்.எல்.நஜீம் அவர்களின் தலைமையில் வெகுவிமரிசையாக பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மறைந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சருமான கௌரவ சனத் நிஷாந்த அவர்களின் பாரியார் சட்டத்தரணி திருமதி.ஷாமரி பெரேரா அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, விசேட அதிதிகளாக முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எச்.எம்.றியாஸ் அவர்களும், பள்ளம கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எச்.எம்.அசன்ங்க பிரதீப் குமார அவர்களும், புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. ஜே.எம்.பீ.வசந்த குமார அவர்களும், பள்ளம கோட்டக்கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திரு.அந்தோனி பெனாண்டோ அவர்களும் , பள்ளம கோட்டக்கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் திரு. ஆர்.எம்.எஸ்.என்.எம்.றௌஸ்தீன் அவர்களும், மதவாக்குளம் ஜும்ஆ பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும், அ.இ.ஜ.உ மதவாக்குளம் கிளை உறுப்பினர்களும், முன்னய நாள் எமது மதவாக்குளம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம், பாடசாலை பழைய மாணவிகள் சங்கங்களின் உறுப்பினர்களும், மதவாக்குளம் வர்த்தகர் சங்கம், மதவாக்குளம் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், அணி நடை, மைதான கண்காட்சி, வினோத உடை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டிகளின் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வெற்றிக் கிண்ணங்கள் என்பன கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

(Rose,Jasmine,Lotus) என மூன்று இல்லங்களாக பிரிந்து மாணவர்கள் தமது நிகழ்ச்சிகளை படைத்தனர்.
இல்லப் பொறுப்பாசிரியர்களின் சிறந்த வழிகாட்டல், அர்ப்பணிப்பு மற்றும் அற்புதமான பயிற்று விப்பின் பின்னர் கலந்து கொண்ட இல்லங்களைச் சேர்ந்த அணிகள் தங்களது அதீத திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

ஊர் மக்கள் மாணவ ரசிகர்கள் புடைசூழ விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில்
‘Rose’ இல்லம் 2024 நடப்பு வருடத்தின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.

மேலும் ‘Jasmine’ இல்லம் இரண்டாமிடத்தினையும், ‘Lotus’ இல்லம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

 

(ஷாகிர் தௌபீக், ஏ எம் எம் இப்ராஸ் (அஜ்வாதி))

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *