வெல்லம்பிட்டி கொத்தட்டுவ இல் 5 நாட்களாக நடாத்தப்பட்ட நபியவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சி..
நாஸ் கலாசார நிலையமும் தாருள் குர்ஆன் லிபராயிமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவும் இணைந்து நடாத்திய நபியவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சி கடந்த முதலாம் திகதி தொடக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்களாக வெல்லம்பிட்டி கொத்தட்டுவ நாஸ் கலாசார நிலையத்தில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாளிம் மௌலவி தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
நபியவர்களின் மக்கா மதீனா வாழ்க்கை முறைமைகளையும் உள்ளடக்கியதாக ஆறு தலைப்புக்களில் வகைப்படுத்தி நாஸ் நிறுவனத்தின் மாணவர்களினால் தேவையான விளக்கங்களுடன் பொருட் கண்காட்சியும் இடம் பெற்றது.
இஸ்லாமிய மக்களுடன் ஏனைய சகோதர இன மக்களும் குறித்த கண்காட்சியை கண்டு போதிய அறிவுகளைப் பெற்றுக் கொண்டனர். திங்கள் கிழமை வரை வரை சுமார் பதினாறாயிரம் பேர் வரை வருகை தந்து கண்காட்சியை கண்டு களித்துள்ளதாக அதன் நாஸ் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி ஆரம்பமான கண்காட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அவருடன் கொலன்னாவ பிரதேசச் செயலக உதவிப்பணிப்பாளர் சமிந்த பெரேரா மானல், அங்குனு தந்திர தர்மரத்ன தேரர், கெகல்வல பஞ்ஞானந்த தேரர், கிராம உத்தியோகத்தர்களான தமயந்தி பெரேரா, ரோகித்த பெரேரா, கொத்தட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரி அரோசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)