ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் முயற்சி வெற்றி : காத்தான்குடியில் வீதிகள் அபிவிருத்தி..!
சுமார் 40 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் 8.25 கிலோ மீட்டர் நீளமான வீதிகள் காப்பட் வீதிகளாக காத்தான்குடி பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இவ்வேலைத்திட்டம் தொடர்பில் முன்னாள் கௌரவ அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
உலக வங்கியின் நிதியளிப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் ICDP (உள்ளக இணைப்பு அபிவிருத்தி) திட்டத்தின் கீழ் காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், பாலமுனை பிரதேசங்களில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்த பல மிக முக்கிய வீதிகள் காப்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் முன்னாயத்தப்பணிகள் யாவும் நிறைவுற்று தற்போது கொழும்பு ICDP திட்ட அலுவலகத்தினால் தேசிய மட்ட கேள்வி கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024.03.18ம் திகதியைத் தொடர்ந்து தெரிவு செய்யப்படும் ஒப்பந்ததாரருக்கு வேலைகள் வழங்கப்படும்.
எமது வேண்டுகோளின் பேரிலும் முன்னாள் கௌரவ அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் அவர்களின் தனிப்பட்ட ரீதியான காத்தான்குடி பிரதேச மக்கள் மீது கொண்டிருக்கும் பற்றின் காரணமாகவும் உலக வங்கியின் இவ்வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டிய வீதிகளின் விபரங்கள் கடந்த வருடம் பெப்ருவரி மாதத்தில் கௌரவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக கடந்த 2023.02.21ம் திகதி ICDP திட்டம் மற்றும் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றின் பொறியியலாளர்களுடன் முன்னாள் அமைச்சர் அவர்களின் பிரத்தியேகச்செயலாளர் எம்.சரூஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் முதற்கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொன்டிருந்தனர். இது தொடர்பான எமது செய்தி அன்றைய தினமே வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் முன்மொழியப்பட்ட வீதிகளில் இரு வீதிகளை தவிர மற்ற அனைத்து விதிகளும் அபிவிருத்தி செய்யத்தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்யடுத்த கட்டமாக கடந்த 2023.03.09ம் திகதி தெரிவு செய்யப்பட்ட வீதிகளுக்கான செலவு மதிப்பீட்டறிக்கை தயாரிப்பதற்காக மட்டக்களப்பு RDA பொறியியலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேகச்செயலாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோரைக்கொண்ட குழுவினர் வருகை தந்திருந்தனர்.
இப்பணியில் அல் பறகத் மீனவர் அமைப்பின் செயலாளர் MY.ஆதம் லெவ்வை, தலைவர் SHA.அஸிஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தாஹிர், பாலமுனை சனச சமூக நிலையத்தலைவர் பவுசர், பாலமுனை கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் ஜாபீர் ஆகியோரும் ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர். இது தொடர்பான செய்தியும் 2023.07.10 திகதி வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது இவ்வீதிகள் அபிவிருத்தி செய்வதற்கான சகல முன்னாயத்தச்செயற்பாடுகளும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் மே மாதத்தில் வீதிகளின் அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதமளவில் நிறைவுறும்.
இவ்வீதிகளை மிகுந்த கஷ்டத்துடன் தினமும் பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களது மிக நீண்டகாலத்தேவையும் காத்தான்குடியின் இரு முனைகளான பூநொச்சிமுனை மற்றும் பாலமுனையினையும் இலகுவான போக்குவரத்தூடாக இணைக்கும் பெரும் சமூகப்பணியினையும் நிறைவு செய்து தரும் முன்னாள் கௌரவ அமச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகும்.
தனது சொந்த ஊரை விடவும் இவ்வீதி அபிவிருத்தி திட்டத்தில் பெரும் முன்னுரிமை கொடுத்துள்ளமை எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத பணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. (தனக்கு கிடைத்த 20Km இல் 8.25Km நீளத்தை வீதி அபிவிருத்தியைத் தந்துள்ளார்)
இவ்வீதிகளை ICDP திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையைத் தடுப்பதற்கு அல்லது போலியாக தமது பெயரை பின் கதவால் இடுவதற்கும் அரசியல் பிரமுகர்கள் செயற்பட்டார்கள் எனும் உண்மையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகளில் விபரம்
1. டீன் வீதி
இவ்வீதியானது ஏற்கனவே இவர்களாலேயே கோட்ட ஆட்சியில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு நாட்டு நிதி நிலைமையினால் இடையில் நிறுத்தப்பட்டதாகும் (2.1Km உத்தேச மதிப்பீடு 17 கோடி 80 இலட்சம்) பிரதான வீதியில் தொடங்கி கடற்கரையை அடைந்து கடலோர வீதியூடாகச்சென்று கடற்கரை கான்கிரீட் வீதியில் முடிவுறும்.
2.பாலமுனை கர்பலா – காத்தான்குடி இணைப்பு வீதி (2.2Km உத்தேச மதிப்பீடு 13 கோடி 80 இலட்சம்) தீன் வீதி அலியார் சந்தையில் தொடங்கி பாலமுனை பிரதான வீதி சந்தியை அடையும்.
3.அல் அக்ஸா?(முகைதீன் பள்ளிவாயல் வீதி)
(2.75 Km உத்தேச மதிப்பீடு 13 கோடி 20 இலட்சம்) அல் அக்ஸா பள்ளிவாயலில் தொடங்கி பதுரியா வீதியூடாகச்சென்று முதியோர் இல்ல வீதியை அடைந்து அங்கிருந்து மஞ்சந்தொடுவாய் புதிய பாலமுனை வீதியூடாக பூநொச்சிமுயை அடைந்து அங்கிருந்து பூநொச்சிமுனை சுனாமி (பச்சை வீடு) வீட்டுத்திட்ட வீதியில் நிறைவுறும்.
4. CTB வீதி மற்றும் பெண் சந்தை வீதி
(1.1Km உத்தேச மதிப்பீடு 5 கோடி 10 இலட்சம்) பெண் சந்தை வீதி, இரண்டாம் குறுக்கு வீதி, சிடிபி டிப்போ பின்னால் செல்லும் மையவாடி வீதி என்பன உள்ளடங்கும்
இவ்வீதி அபிவிருத்தியின் மூலம் காத்தநகர் பிரதேசத்தின் சமூக, பொருளாதாரத் துறைகளிலும் மேம்பாடு ஏற்படும்.
MY.ஆதம் லெவ்வை
செயலாளர்
அல் பறகத் மீனவர் அமைப்பு
(ஆதிப் அஹமட்)