உக்குவளை தாருல் உலூம் சபீலுஸ் ஸலாம் அரபுக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
உக்குவளை பரகஹவெலயிலமைந்துள்ள தாருல் உலூம் சபீலுஸ் ஸலாம் ஆண்கள் அரபுக் கல்லூரி மற்றும் உம்மு ஸலாமா பெண்கள் அரபுக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆறு வருட மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர் மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று (பெப்ரவரி 3 ந் திகதி ஞாயிறு) காலை 8.00 மணிக்கு தாருல் உலூம் சபீலுஸ் ஸலாம் அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ளன.
இக்கல்லூரிகளின் ஸ்தாபகத் தலைவரும் மஸ்ஜிதுகள் சங்க தலைவருமான தேசபந்து அல்ஹாஜ் ஏ.எச்.எம்.முஹ்த்தார் ஜே பி தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக, கண்டி புர்கானிய்யா அரபுக் கல்லூரி உதவி அதிபர் பீ.எச்.ருவைஸ்டீன் , விசேட பேச்சாளராக அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.யஹ்யா மற்றும் கலாசார திணைக்கள மாத்தளை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.ரஹ்மதுல்லாஹ் உட்பட உலமாக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவில் 2023 , 2024 ஆகிய வருட ஆலிம்கள், ஹாபிழ்கள் 25 பேருடன் ஆலிமாக்கள் ,ஹாபிழாக்கள் 19 பேரும் பட்டமளித்து கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(உக்குவளை ஜலீல்)