காத்தான்குடியில் கைதாகிய 30 பேருக்கும் பிணை..!
காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று அதிகாலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேரும் நேற்று மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு ஒன்று கூடி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 304 விளையாடிக் கொண்டிருந்த போதே அங்கு சென்ற பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா ஒரு லட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இது தொடர்பான அடுத்த வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)