வினாத்தாள் கசிவு, இடைநிறுத்தப்பட்டது மேல் மாகாண கணித, ஆங்கில பரீட்சைகள்
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தரம் 10 மற்றும் 11 வகுப்புகளுக்கான ஆண்டிருதிப் பரீட்சைகளின் மிக முக்கிய பாடங்களான கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களின் பரிட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியமையால் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பரிட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கள்கிழமை ஆங்கிலப் பாடப் பரீட்சையும், செவ்வாய்க்கிழமை கணிதப்பாடப் பரீட்சையும் இடம்பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.