உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்பாட்டத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு

அரசாங்கம் பிறப்பித்த வெட் வரி அறவீடு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அமைதி வழியில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் பொலிஸார் தமது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்று முன்தினம் (29) கனம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்தனர்.

‘போட்டார்கள் வெட்,நாடே பிளேட்’ பதாகைகளுடன் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி அமைதி வழியில் தாம் உட்பட கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட கண்மூடித்தமனான கண்ணீர்புகை மற்றும் நீர் தாரை பிரயோகங்களால் பலர் காயமடைந்தும் மற்றுமொரு தரப்பினர் சிகிக்கைக்காக வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர் என சட்டத்தரணி சம்பத் விஜேவர்தன ஊடாக மனுதாரர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக புறக்கோட்டை. குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிடிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், கொழும்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்,பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *