இந்த ஆண்டுக்கான தேசிய பரீட்சை திகதிகள் அறிவிப்பு..!
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய பரீட்சை களுக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் க.பொ த சாதாரண தர பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பித்து 15ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதே வேளை க.பொ த உயர்தர பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்து டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.