காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் விருது விழா..!
காத்தான்குடி மட்/மம/ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2024 விருது விழா வியாழக்கிழமை (29) பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எஸ்.எம்.முஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷெய்த் அலிசாஹிர் மெளலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம், முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் விஷேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சாதனை புரிந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.