உள்நாடு

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வு.. புத்தளத்தில் நிகழ்வு..

“நூறு கோடி மக்களின் எழுச்சி”, “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற தொனிப்பொருளில் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் மற்றும் மட்டக்களப்பு “சங்கத்” பெண்ணிலைவாத நண்பிகள் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த விஷேட நிகழ்வொன்று அண்மையில் (27) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

“பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் மாசி மாதம் 14 ம் திகதி கலைகளுக்கூடாக எழுச்சி கொள்வதன் மூலம் வருடாந்தம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அக்கரைப்பற்று, ஹற்றன், அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கி குறித்த மாவட்டங்களில் பெண்ணிலைவாத அமைப்புக்கள், சமூக மாற்றச் செயற்பாட்டாளர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பணிபுரிகின்ற பெண்கள், கிராம மட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக பணிபுரிகின்ற பெண்களை ஒன்றிணைத்து குறித்த இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

“அன்பினால் ஓர் உலகம் செய்வோம்” , “பெண்களையும் எந்த ஒரு மனிதரையும் வன்முறை செய்யாத மகன்களை, சகோதரர்களை, நண்பர்களை, துணைவர்களை உருவாக்குவோம்” “அன்பாலும் நட்பாலும் இணைந்த வாழ்தலை உருவாக்குவோம்” “பெண்களின் பாரம்பரிய அறிவைக் கொண்டாடுவோம்” “பூமி மீதான வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எனும் ஐந்து தொனிப்பொருளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

 

(எம்.யூ.எம்.சனூன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *