பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்ற வித்யாரம்ப விழா..!
தரம் ஒன்றிற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கமைய பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.எம்.ஹலீம் மஜீத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் தொழில்நுட்ப கல்லூரித் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.கே.முஹைஸ் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு முதலாம் ஆண்டுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவ, மாணவிகளால் பதிய மாணவர்கள் பூக்கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.ஏ.சி.ஹாமீம், உதவி அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் உட்பட பாடசாலை ஆசியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் வரவேற்புரையாற்றினார். பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.கே.முஹைஸ் ஆகியோர்கள் உரையாற்றினர்.
பிரதம அதிதி மற்றும் அதிபர், ஆசிரியர்கள் புதிய மாணவர்களுக்கு பரிசில்களையும், இலவச பாடசாலை சீருடைகளையும் வழங்கினர்.
நன்றியுரையை உதவி அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)