கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.. சேவை நலன் பாராட்டு விழாவும்..
புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து கல்முனை கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த திறன் அபிவிருத்தி பாடங்களான ஆங்கிலம்,சிங்களம்,சித்திரம்,கர்நாடகம்,பரதநாட்டியம் போன்ற பாடத்திட்டதினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சேவை நலன் பாராட்டி இருவரை கௌரவித்த நிகழ்வும் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.ஜீ.சித்தி பாஜியா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (25) கல்முனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அகீலா பாணு மற்றும் கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஹைதர்(ஜே.பி) ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ,கௌரவ அதிதியாக சுற்றுச்சூழல் மனித வள அபிவிருத்தி அதிகாரி எம்.பீ.ஸியாரதுல் பெரோஸ்,விசேட அதிதியாக ஆபிதா ஹேன்லூம் உரிமையாளர் எம்.என்.சற்.றூமி மற்றும் விசேட அழைப்பாளர்களாக தலைமைபீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலி,சிறுவம் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் ஓ.கே.எப்.சரீபா,கவிஞர் விஜிலி மூஸா மற்றும் கவிதாயினிகள்,மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஒலிபெருக்கி சேவையினை இன,மதம் கடந்து செய்து 37 வருடங்கள் சேவை செய்தமைக்காக எம்.எம்.நிஸார்(நியூ நிஸார்) மற்றும் சிகை அலங்கார சேவையினை 38 வருடங்கள் ஊர் மக்களுக்காக வழங்கியமைக்காக கணபதிபிள்ளை தாமோதரம்(சிகான் சலூன்) ஆகிய இருவரையும் பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(பெரியநீலாவணை, மருதமுனை மேலதிக செய்தியாளர்கள்)