இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளியீடு..
இலக்கியத்துறையில் முத்திரை பதித்த, மற்றும் இலைமறை காய்களாக இருக்கும், இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் “உலகம் முழுவதும் எங்கள் கதைகள்” சிறு கதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் “பென் கிளப்” தலைவி எழுத்தாளர் சித்தி மசூறா சுஹூர்த்தீன் தலைமையில் (22) நடைபெற்றது.
ஆற்றலும், ஆளுமையும்மிக்க “இலங்கை பென் கிளப்” (Pen Club) உறுப்பினர்களால், தொகுத்து வெளியிடப்பட்ட சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வியும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷனின் தலைவியும் அவுஸ்திரேலியா நாட்டின் முஸ்லிம் பெண்கள் கவுன்சில் தலைவியுமான சட்டத்தரணி திருமதி மரியம் நளிமுத்தீன் கலந்து கொண்டார்.
இதில் மரியம் நளீமுத்தின் அவர்களின் கணவர் கவிஞர் டொக்டர் நளிமுத்தீன் சிஹாப்தீன், பிரதி கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், இணைப்பாளர் மிப்ராஸ் மன்சூர் உட்பட பெண் எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், பெண் கிளப் நிர்வாக அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.